/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
/
பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
ADDED : செப் 29, 2024 07:43 AM

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சுற்றுலா வந்த பஸ் ஆண்டிபட்டி அருகே கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்தனர்.
மார்த்தாண்டம் காப்புக்காடு விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச்சேர்ந்த 46 மாணவர்கள் ,5 ஆசிரியைகளுடன் பஸ்சில் கம்பம் அருகே சுருளி அருவிக்கு சுற்றுலா சென்றனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டிபட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் அருகே சென்றபோது கட்டுப்பாடு இழந்த பஸ் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
பஸ்சில் பயணித்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் சுகன்யா 30, சரண்யா 38, தங்கம் 53, முத்துமாரி 34, ஷோபா 36, மற்றும் மாணவர்கள் சஞ்சனா 8, ஸ்டெபி 11, கிருஷ்ணரிசி 13, சுர்ஜித் 9, ஆதிரா 13, அபிஷேக் 13, ஜெர்பின் ஜீனு 11, ரித்திக் 13, லிபிஷா 10, காப்புக்காடு ரோசிக் 11, ஒதச்சி கோட்டை ரோசித் 11, பஸ் டிரைவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த புரோசன் 30, ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.