/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் பலி
/
நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் பலி
நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் பலி
நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் பலி
ADDED : ஏப் 16, 2025 08:49 AM
தேவதானப்பட்டி : டி.காமக்காபட்டி கிணற்றில் நீச்சல் தெரியாமல் பள்ளி மாணவர் நவீன்குமார் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டி மாயாண்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 62. இவரது மகள் நந்தீஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே நெல்லூரைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நவீன்குமார் 14. நவீனா 12 இரு பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமார் இறந்தார். இதனால் மகள், பேரன், பேத்தியை ராஜேந்திரன் தனது ஊருக்கு அழைத்து வந்து பிள்ளைகளை படிக்க வைத்தார்.
தேவதானப்பட்டி அரசு பள்ளியில் நவீன்குமார் 9 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறையில் டி.காமக்காபட்டி அய்யாத்துரை என்பவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி, சிவா, கவியரசுடன் நவீன்குமார் அரைகுறையாக நீச்சலிடித்து குளித்துக் கொண்டிருந்தார்.
இதில் நவீன்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கினார். உடன் சென்றவர்கள் காணவில்லை என தகவல் தெரிவித்தனர். பெரியகுளம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடும் போது நவீன்குமார் உடல் மீட்கப்பட்டது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

