/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய கோகோ போட்டி பள்ளி மாணவிகள் பங்கேற்பு
/
தேசிய கோகோ போட்டி பள்ளி மாணவிகள் பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 06:16 AM

பெரியகுளம்: தேசிய அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற லட்சுமிபுரம் ஸ்ரீரோஸி வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஒடிசா மாநிலம் பூரியில் கடந்த வாரம் நடந்த தேசிய அளவிலான 57வது கோகோ விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தமிழக பெண்கள் கோகோ அணிக்கு, பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஸ்ரீ ரோஸி வித்யாலயா (சி.பி.எஸ்.சி.,) பள்ளி மாணவிகள் தன்யஸ்ரீ, அவதாரணி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளியில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துகுகன், தாளாளர் ஐஸ்வர்யா, தமிழக கோகோ விளையாட்டு கழகச் செயலாளர் நெல்சன் சாமுவேல், பள்ளியின் முதல்வர் பாரதரத்னம், தமிழக கோகோ அணியின் பயிற்சியாளர் விமலேஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

