ADDED : ஏப் 24, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர் தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். கவிஞர் இதய நிலவன் எழுதிய ஒரெண்டே ரெண்டே நாவல் குறித்து கிளை பொருளாளர் ஆசிரியர் கவுசல்யா, ரெய்ச்சல் கார்சன் எழுதிய உலகப் புகழ் பெற்ற சூழலியல் தொடர்பான நூலான ' மெளன வசந்தம் குறித்து கிளை செயலாளர் திலீபன் பேசினார்கள்.
மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நூல் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நூலாசிரியர் இதய நிலவன் ஏற்புரையாற்றினார். எழுத்தாளர் இராஜி லா ரிஸ்வான், மணியரசன்,அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் நித்தியானந்தன் நன்றி கூறினார்.

