/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏல சாகுபடி தொழில் நுட்பங்களை மாற்ற விஞ்ஞானிகள்... வலியுறுத்தல்; இடுக்கி மாவட்டத்தில் குறையும் மழைப்பொழிவு

ADDED : ஜன 27, 2025 04:39 AM
கம்பம் : இடுக்கி மாவட்டத்தில் மழை பொழிந்த நாட்கள், பெய்யும் மழையின் அளவு குறைந்தது குறித்து சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், சாகுபடியில் மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகளிடம், ஏலக்காய் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான பரப்பில் சாகுபடி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஏலத் தோட்டங்களில் நோய் தாக்குதல், அதிக மழை, அதிக வெயில், கூடுதல் பனி போன்ற சீதோஷ்ண நிலைகளால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் அதிக மழை காரணமாக ஏலச்செடிகள் சேதமடைவது அதிகரித்துள்ளது. இதனால் புதிய செடிகளை நடவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஏல விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் செலவு அதிகரிப்பு, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இடுக்கி மாவட்டத்தில் குறிப்பாக பீர் மேடு, தேவிகுளம், நெடுங்கண்டம், தொடுபுழா தாலுகாக்களில் ஏலக்காய் சாகுபடி பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் பெய்த மழை, பனிப்பொழிவு, வெயில் போன்றவற்றை சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள், ஏலக்காய் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.
பாம்பாடும்பாறை ஏலக்காய் ஆராய்ச்சி மைய தலைவர் பேராசிரியர் முருகன், விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வில் கடந்த 40 ஆண்டுகளில் ஆண்டுதோறும் பெய்த மழைப்பொழிவு நாட்கள் கணக்கீடு செய்யப்பட்டன. அதில், மழை பெய்யும் நாட்கள் சராசரியாக ஆண்டிற்கு 20 நாட்கள் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதே போல ஆண்டு மழைப் பொழிவில் 13.62 மி.மீ. மழை அளவு குறைந்துள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனால் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு, நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.