/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்
/
பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்
ADDED : செப் 13, 2025 04:15 AM
போடி: போடி பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காககாத்திருக்கும்பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இரும்பு இருக்கைகள் மாயமாகி உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மழை, வெயிலால் சிரமம் அடைந்தனர்.தொலை துார பஸ்களுக்காக காத்திருக்கும்பயணிகள் அமர்வதற்காக 12 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.
ஆட்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் பயணிகளுக்கான இரும்பு இருக்கைகளை சமூக விரோதிகள் திருடி சென்று விட்டனர். இதனால் வெயில், மழையில்சிரமப்படுகின்றனர். மது குடிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து உள்ளதால் பெண் பயணிகள் நிற்ககூட முடியாமல்அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகள்நிழற்குடையில்பாதுகாப்பான இருக்கைகள் அமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.