/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரண்டாம் நாள் புத்தகத் திருவிழா கோலாகலம்
/
இரண்டாம் நாள் புத்தகத் திருவிழா கோலாகலம்
ADDED : மார் 25, 2025 05:03 AM
தேனி: தேனி புத்தக திருவிழாவின் 2ம் நாளான நேற்று பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பழனிசெட்டிபட்டியில் 3ம் ஆண்டு புத்தக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மதியம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து இலக்கிய அரங்கில் உள்ளூர் எழுத்தாளர்கள் பேசினர். மாலையில் நடந்த சிந்தனை அரங்கத்தில் எஸ்.பி., சிவபிரசாத், சி.இ.ஓ., இந்திராணி, ஆர்.டி.ஓ., மாணிக்கம், ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசினார்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் கைதிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கினர்.