/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருப்பு பேட்ச்சுடன் பணி செய்த செயலர்கள்
/
கருப்பு பேட்ச்சுடன் பணி செய்த செயலர்கள்
ADDED : பிப் 05, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் சங்கர் அலுவலகப் பணிக்கு சென்றபோது சமூக விரோதிகள் மறித்து கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
குற்றவாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளர்கள் கருப்பு 'பேட்ச்' அணிந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளிலும் செயலாளர்கள் கருப்பு 'பேட்ச்' அணிந்து பணி செய்தனர்.