/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் நாற்றங்கால் அமைக்கும் முன் விதை நேர்த்தி அவசியம்
/
நெல் நாற்றங்கால் அமைக்கும் முன் விதை நேர்த்தி அவசியம்
நெல் நாற்றங்கால் அமைக்கும் முன் விதை நேர்த்தி அவசியம்
நெல் நாற்றங்கால் அமைக்கும் முன் விதை நேர்த்தி அவசியம்
ADDED : ஜூன் 11, 2025 07:17 AM
தேனி : நெல் நாற்றங்கால் அமைக்கும் முன் விதை நேர்த்தி செய்வது பயிர் நோய்தாக்குதலால் பாதிக்கபடுவதை தடுக்கும் என வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் திலகர் தெரிவித்துள்ளனர்.
அவர் கூறியதாவது: நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்வதால், சீரான வளர்ச்சி, எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மேலும் நாற்றங்கால் அமைக்கும் முன் வேதியியல் முறைப்படி அல்லது உயிரியியல் காரணியான சூடோமோனாஸ் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வது அவசியம் ஆகும். விதை நேர்த்தி செய்வதால் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.
விதைகள் முளைப்புத்திறனை தாங்களாகவே சோதிக்கலாம். சிறிய பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் மணல் எடுத்து அதில் உதாரணமாக 50 விதை நெல்களை வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதில் 40 விதை நெல்லுக்கு மேல் முளைத்திருக்க வேண்டும். நெல் முளைப்புத்திறன் 80 சதவீத்திற்கு மேல் இருக்க வேண்டும். விதைகளை பரிசோதனை செய்ய விரும்பும் விவசாயிகள் தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள விதை பரிசோனை மையத்தில் விதைகளை வழங்கி பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றனர்.