/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறுவடை ஆரம்பம்
/
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறுவடை ஆரம்பம்
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறுவடை ஆரம்பம்
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறுவடை ஆரம்பம்
ADDED : ஆக 24, 2025 03:57 AM
கம்பம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறுவடை ஆரம்பமாக உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. சுருளிப் பட்டி நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கூடலூர், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக் கருத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், தென் பழநி உள்ளிட்ட பகுதிகளில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது.
பன்னீர் திராட்சை ஆண்டிற்கு 3 முறை அறுவடையும், விதையில்லா திராட்சை ஆண்டிற்கு ஒரு அறுவடையும் செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சை ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 3 மாதங்களுக்கு அறுவடை செய்வார்கள். பன்னீர் திராட்சை தற்போது கிலோ ரூ.55 முதல் ரூ.65 வரை விலை கிடைக்கிறது.
விதையில்லா திராட்சை பச்சை கிலோ ரூ. 80 முதல் ரூ.90 வரையும், சரத் சீட்லெஸ் கறுப்பு கிலோ ரூ. 130 முதல் ரூ.140 விலை கிடைக்கிறது.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறுவடை துவங்கியுள்ளது.
ஓடைப்பட்டி முன்னோடி திராட்சை விவசாயி கலாநிதி கூறுகையில், 'விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விதையில்லா திராட்சை அறவடை துவங்கி உள்ளது. கேரளா மற்றும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
விநாயகர் சதூர்த்தி விசேசங்களுக்கு விதையில்லா திராட்சை அதிகமாக விரும்புவார்கள். வரத்து குறைவாக இருக்கும். காரணம் இதன் சாகுபடி பரப்பு குறைந்து விட்டது.
இப்போது தான் சிலர் மீண்டும் விதையில்லா திராட்சை சாகுபடிக்கு திரும்பியுள்ளனர்.
எனவே ஓடைப்பட்டி வட்டாரத்தில் மீண்டும் விதையில்லா திராட்சை சாகுபடி பரப்பு அதிகரிக்கும்,' என்றார்.