/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
/
ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
ADDED : அக் 14, 2024 04:04 AM
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே தாழையூத்து பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். தாழையூத்து பழங்குடியினர் காலனி அருகே சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 100 கிராம் அளவுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவற்றை அப்பகுதியில் விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் தொப்பையாபுரத்தைச் சேர்ந்த அஜித் 28, அதேப்பகுதியை சேர்ந்த அஜித் குமார் 26, வாய்க்கால்பாறையைச் சேர்ந்த அழகுராஜா 31, என, தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.