/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
40 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்: ஒருவர் கைது
/
40 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : நவ 11, 2024 12:32 AM

கடமலைக்குண்டு; தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் சென்றது.
கடமலைக்குண்டு வி.ஏ.ஓ., ரகு, போலீசார் பாலமுருகன், முத்தையா ஆகியோர் மந்திச்சுனை மூலக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாத்திபாறை மலைக் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்பகுதி தனியார் கம்பெனி காட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக்கேனில் 40 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்துள்ளது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அப்பகுதியில் இருந்தவரிடம் விசாரித்ததில் அவர் கடமலைக்குண்டு பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் 50, என, தெரிய வந்தது. கள்ளச்சாராய ஊறலை கைப்பற்றி குமரேசனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சாராய ஊறல் தொடர்பாக அப்பகுதியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.