/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராவல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
/
கிராவல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
ADDED : நவ 21, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு சென்ற டிராக்டரை க.விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் நேற்று முன் தினம் க.விலக்கு - வைகை அணை ரோட்டில் களப்பணியில் இருந்த போது அந்த வழியாக டிராக்டருடன் கூடிய ட்ரெய்லரில் கிராவல் மண் ஏற்றி சென்றனர். வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்த போது அரசு அனுமதியின்றி ஒன்றரை யூனிட் கிராவல் மண் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து சுரேஷ்குமார் புகாரில் க.விலக்கு போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து கரட்டுப்பட்டியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.