ADDED : அக் 16, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : கம்பமெட்டு ரோட்டில் நேற்று காலை கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, நிற்காமல் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தை சேர்ந்த குமார் 49, நஜீம்பாசில் 21 ஆகியோரை கைது செய்து மினி லாரி பறிமுதல் செய்தனர். உத்தம பாளையம் புட் செல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.