/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக பகுதிகளை வளமையாக்க 'சுயசார்ப்பு ஊராட்சி' திட்டம்
/
ஊரக பகுதிகளை வளமையாக்க 'சுயசார்ப்பு ஊராட்சி' திட்டம்
ஊரக பகுதிகளை வளமையாக்க 'சுயசார்ப்பு ஊராட்சி' திட்டம்
ஊரக பகுதிகளை வளமையாக்க 'சுயசார்ப்பு ஊராட்சி' திட்டம்
ADDED : ஜூலை 12, 2025 03:59 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை வளமைபடுத்தவும், தேவைகளை தங்கள் சுயவருவாயில் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சுயசார்ப்பு ஊராட்சி திட்டத்திற்கான பயிற்சிகள் துவங்கி உள்ளன.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒரு கூறுகையில், ஊராட்சிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கின்றன. இத தவிர ஊராட்சிகளுக்கு கட்டுமான திட்ட அனுமதி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், சந்தைகள் ஏலம் விடுதல் உள்ளிட்டவை மூலமும் வருமானம் வருகிறது. இந்த வருவாயை எவ்வாறு பெருக்குவது, மேலும் இந்த வருவாய் மூலம் ஊராட்சிகளில் எவ்வாறு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவத என ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டாரம் வாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் வரி வசூலித்தல், உரம் தயாரித்தல், அதனை விற்பனை செய்தல் போன்ற வருவாய் அதிகரிக்கும் செயல்முறைகள் பற்றியும், ஊராட்சிகள் சொந்த வருவாய் மூலம் தேவைகளை பூர்த்தி செய்வது எவ்வாறு என பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் இம்மாத துவக்கத்தில் சில துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சிகளில் பட்டறிவு பயணம் மேற்கொண்டனர்.
அங்கு பார்வையிட்டவற்றையும் ஊராட்சிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மாவட்ட ஊராட்சி அலுவலகம் அருகே நடந்த பயிற்சி முகாமில் ஆண்டிபட்டி ஒன்றிய ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட ஊராட்சி செயலர் குமரேசன் வளமைய பயிற்சியாளர் கீர்த்தி பயிற்சிவழங்கினர்.