ADDED : ஜூலை 19, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி காமராஜ் பஜார், பி.ஹைச்.ரோடு, போடி -தேவாரம் மெயின் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பகலில் சரக்கு வாகனங்களை நிறுத்தியும், மாலை 6:00 மணிக்கு மேல் பொறித்த மீன் கடைகள், பானிபூரி கடைகள் வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இரவில் டூவீலரில் செல்வோர் மீது மீன் மீது தூவப்பட்ட மிளகாய் பொடி காற்றில் பறந்து கண்களில் விழுகின்றன. இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகின்றன. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெருக்கடிக்கு போலீசார் தீர்வு காணவேண்டும்.