/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயற்கை காளான் கிலோ ரூ.500க்கு விற்பனை
/
இயற்கை காளான் கிலோ ரூ.500க்கு விற்பனை
ADDED : அக் 16, 2024 04:17 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சமீபத்தில் பெய்த மழையால் வயல் வரப்புகள், மேய்ச்சல் நிலங்கள், வனம் சார்ந்துள்ள பகுதிகளில் இயற்கை காளான் முளைத்து வருகிறது. மழை பெய்த நாளில் இரவில் காளான்கள் முளைக்கும். முளைத்த ஓரிரு நாளில் பயன்படுத்தாவிட்டால் கெட்டுவிடும். மழைக்கு மறுநாள் காலையில் குறிப்பிட்ட இடங்களை குறிவைத்து தேடி செல்பவர்களுக்கு காளான்கள் கிடைக்கும்.
சிலர் இதனை பகுதி நேர தொழிலாக மேற்கொண்டு தினமும் 2 முதல் 5 கிலோ வரை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கை காளான்களில் அதிக சுவையும், சத்துக்களும் அதிகம் என்பதால் கிராமம் மற்றும் நகர் பகுதியில் இயற்கை காளான்களுக்கு மவுசு அதிகம். அக்.,நவ.,மாதங்களில் மட்டுமே இயற்கை காளான்கள் முளைக்கும். இதனை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் தற்போது அம்பு காளான், அவல் காளான், குடை காளான், முட்டைக் காளான் வகையைச் சேர்ந்த இயற்கை காளான்கள் தரத்திற்கு தக்கபடி கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.