நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை, ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இதில் ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் சகாய சங்கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதியின முறையாக கையாளுதல், சொத்துரிமை, பெண்களுககான சட்டங்கள், குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாப்பு, ஓய்வூதிய திட்டங்கள் பற்றி விளக்கினர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்ற பெண்கள் பங்கேற்றனர். முன்னோடி வங்கி கவுன்சிலர் ஸ்ரீமுருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, சட்டபணிகள் ஆணைக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பேசினர்.