ADDED : மே 01, 2025 06:58 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் மெக்கானிக்கல் துறை சார்பில்,' அட்வான்ஸ்டு மெட்டீரியல் அண்டு சஸ்டெயினபுள் எனர்சஜி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், கர்நாடகா, பெங்களுரூ கிறிஸ்ட் பல்கலை பேராசிரியர் பால்பாண்டியன், 3டி பிரிண்டர் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சியில் மெட்டாலிக் பிரிண்டடு பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.
பல்வேறு மாநிலங்கள், மலேசியா, ஒமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

