ADDED : பிப் 28, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் 'மண்ணும் பெண்ணும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.
மண்ணின் பெருமையையும் பெண் பிள்ளைகள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க கற்றுக் கொள்வது குறித்து கல்லுாரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியை தமிழ்ச்செல்வி, கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஞானசேகரன் எடுத்துரைத்தனர். உதவி பேராசிரியை நந்தினி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

