UPDATED : செப் 22, 2026 07:01 PM
ADDED : செப் 22, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டதல் கருத்தரங்கம் கல்லுாரி செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நடந்தது.கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் அலுவலர் ராஜூ, கல்வியாளர் செந்தில்நாதன், திறனறித்தேர்வு வழிகாட்டுநர் தர்ஷினி உள்ளிட்டோர் வேலைவாய்ப்புத்தேர்வுகள், உலகளாவிய வேலைவாய்ப்பு, ஆங்கிலத்திறன் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி விளக்கினர்.
