/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூத்தோர் தடகளப்போட்டி கூடலுார் ஆசிரியர் சாதனை
/
மூத்தோர் தடகளப்போட்டி கூடலுார் ஆசிரியர் சாதனை
ADDED : ஜன 07, 2025 05:28 AM

கூடலுார்: மாநில அளவில் நடந்த மூத்தோர் தடகளப் போட்டிகளில் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் கருத்த பாண்டியன் சாதனை படைத்தார்.
மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் மதுரை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் ஜன. 3, 4, 5ல் நடந்தது.
இதில் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் கருத்த பாண்டியன் 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்றார். மேலும் கர்நாடக மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற உள்ள மூத்தோர் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். ஆசிரியரை பள்ளி தாளாளர் ராம்பா, தலைவர் பொன்குமரன், பொருளாளர் சிவாபகவத், தலைமை ஆசிரியர் வெங்கட் குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

