/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலிவு விலை உணவுகளின் தரம் குறித்து தீவிர ஆய்வு தேவை
/
மலிவு விலை உணவுகளின் தரம் குறித்து தீவிர ஆய்வு தேவை
மலிவு விலை உணவுகளின் தரம் குறித்து தீவிர ஆய்வு தேவை
மலிவு விலை உணவுகளின் தரம் குறித்து தீவிர ஆய்வு தேவை
ADDED : ஆக 25, 2025 03:30 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் மலிவு விலை உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவுப் பொருட்கள் விற்பனையில் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிறது. பெரிய ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்களுக்கு போட்டியாக உணவுப்பொருட்கள், தின்பண்டங்களை தயார் செய்து சிறிய கடைகளிலும் ரோட்டின் ஓரங்களில் கடைகளிலும் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக வறுத்த மீன், வறுத்த கோழிக்கறி, பலவகை பாஸ்ட் புட் தயாரிப்புகள், எண்ணெய் பலகாரம் அதிக அளவில் விற்கப்படுகிறது. சுவைக்காகவும், நிறத்திற்காகவும் உணவுப்பண்டங்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனம் அதிகம் சேர்க்கப்படுகிறது. உணவுப்பொருட்களை திரும்பத் திரும்ப வறுத்து எடுப்பது பல வகை நோய்களுக்கும் வழி ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் தரம் விற்பனை செய்யப்படும் இடங்களில் நிலவும் சுகாதாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.