sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு! லோக்சபா தேர்தல் பணிக்கு போலீஸ் ஆயத்தம்

/

பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு! லோக்சபா தேர்தல் பணிக்கு போலீஸ் ஆயத்தம்

பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு! லோக்சபா தேர்தல் பணிக்கு போலீஸ் ஆயத்தம்

பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு! லோக்சபா தேர்தல் பணிக்கு போலீஸ் ஆயத்தம்


ADDED : ஜன 30, 2024 07:04 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1225 ஓட்டுச் சாவடிகளில் 198 பகுதிகளில் உள்ள 231 ஓட்டுச்சாவடிகள் பிரச்னைக்குரிய இடங்களாக கண்டறியப்பட்டு, போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

தேனி லோக்சபா தொகுதியில் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய இரு சட்டசபை தொகுதி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. தேனி லோக்சபா தொகுதியில் 2019 ல் லோக்சபா தேர்தலில் ஆண்கள் 7,58,557 பேர், பெண்கள் 7,73,506 பேர், மற்றவர்கள் 177 பேர் என, 15, லட்சத்து 32 ஆயிரத்து 240 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 22ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி 7,92,195 ஆண் வாக்காளர்களும், 8,20,091 பெண் வாக்காளர்கள், இதரர் 217 பேர் என 16,12,503 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 568 இடங்களில் மொத்தம் 1225 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 198 இடங்களில் உள்ள 231 ஓட்டுச்சாவடிகள் பிரச்னைகள் ஏற்படக்கூடிய ஓட்டுச்சாவடிகளாக போலீசார் கண்டறிந்துள்ளனர். இதில் ஆண்டிபட்டி தொகுதியில் 56 இடங்களில் உள்ள 68 ஓட்டுச்சாவடிகளும், பெரியகுளம் (தனி) தொகுதியில் 47 இடங்களில் உள்ள 61 ஓட்டுச்சாவடிகள், போடி தொகுதியில் 45 இடங்களில் உள்ள 50 ஓட்டுச்சாவடிகள், கம்பம் தொகுதியில் உள்ள 50 இடங்களில் உள்ள 52 ஓட்டுச்சாவடிகள் என 198 இடங்களில் உள்ள 231 ஓட்டுச்சாவடிகள் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முந்தைய தேர்தல் ஓட்டுப்பதிவு விபரங்களை வைத்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 80 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவான ஓட்டுச்சாவடிகள், ஓட்டுப்பதிவு மிகவும் குறைந்த ஓட்டுச்சாவடிகளும் இதில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us