/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குலுக்கலில் ைஹவேவிஸ் பேரூராட்சி தலைவர் தேர்வு எதிர்த்து ஏழு கவுன்சிலர்கள் மனு

ADDED : ஜூலை 29, 2025 01:12 AM

தேனி: ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் தேர்வு குலுக்கல் முறையில் தேர்வு செய்ததை ரத்து செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் 7 கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
உத்தமபாளையம் தாலுகா, ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக இருந்த இங்கர்சால் (தி.மு.க.,) கடந்தாண்டு அக்.,ல் இறந்தார். இதனால் அந்த பேரூராட்சியில் தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் தலைவர் தேர்வு ஜூலை 25ல் நடந்தது. தேர்தல் அலுவலராக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் செயல்பட்டார். தலைவர்பதிவிக்கு தி.மு.க.,வைச் சேர்ந்த ஹேமா, நித்திய பிரியா போட்டியிட்டனர். இருவருக்கும் தலா 7 ஓட்டுகள் பெற்றனர்.
இதனால் தேர்தல் அலுவலர் குலுக்கள் முறையில் இருசீட்டுகளில் பெயர்களை எழுதி குலுக்கல் நடத்தினார். அதில் இருந்து ஒரு சீட்டை எடுத்தார். சீட்டில் பெயர் இருந்த நித்திய பிரியா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இந்த தேர்தலில் சிறிய சீட்டில் ஹேமா பெயரும், பெரியசீட்டில் நித்தியபிரியா சீட்டு எழுதி இருந்தார். இதில் பெரிய சீட்டை எடுத்து அறிவித்துள்ளார். இதில் விதி மீறப்பட்டுள்ளது.
இந்த குலுக்கல் முறை தேர்தலை ரத்து செய்து கலெக்டர் முன்னிலையில் தேர்தல் நடத்த வேண்டும் என ஹேமா தலைமையில் கவுன்சிலர்கள் ரோஸ்மேரி, ஹெலன், பழனியம்மாள், முனியம்மாள், தங்கதுரை, பெரியண்ணன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.