/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை மருந்தகத்திற்குள் வெள்ள நீருடன் புகுந்த கழிவு நீர்
/
கால்நடை மருந்தகத்திற்குள் வெள்ள நீருடன் புகுந்த கழிவு நீர்
கால்நடை மருந்தகத்திற்குள் வெள்ள நீருடன் புகுந்த கழிவு நீர்
கால்நடை மருந்தகத்திற்குள் வெள்ள நீருடன் புகுந்த கழிவு நீர்
ADDED : ஏப் 08, 2025 05:13 AM
கம்பம்: கம்பம் கால்நடை மருந்தகத்திற்குள் மழை வெள்ள நீருடன், சாக்கடை கழிவு நீரும் புகுந்ததால், கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கம்பம் கால்நடை மருந்தகம், பத்திரப் பதிவு அலுவலகம், எம்.எல்.ஏ தொகுதி அலுவலகம் ஒரே இடத்தில் உள்ளது. எம்.எல்.ஏ.. தொகுதி அலுவலகத்திற்கு பின்புறம் கால்நடை மருந்தகம் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கன மழையில் நேற்று முன்தினம் இரவு ஏக லூத்து ஓடையில் இருந்து வந்த மழை வெள்ள நீரும், சாக்கடை கழிவு நீரும் கால்நடை மருந்தகத்திற்குள் புகுந்தது.
காலையில் மருந்தகத்திற்கு பணிக்கு வந்த டாக்டர் | மருந்தகம் சாக்கடை கழிவு நீரால் நிரம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது சொந்த செலவில் ஆட்களை அழைத்து வந்து சாக்கடை கழிவு நீரை அகற்றி, மருநகத்திற்கு முன் தடுப்பு ஒன்றை ஏற்படுத்த கட்டுமான தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகளை துவங்கியுள்ளார். இதனால் நேற்று கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மருந்தகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.