/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரைமட்ட தொட்டியில் மூடி இல்லாததால் கழிவுநீர் கலப்பு
/
தரைமட்ட தொட்டியில் மூடி இல்லாததால் கழிவுநீர் கலப்பு
தரைமட்ட தொட்டியில் மூடி இல்லாததால் கழிவுநீர் கலப்பு
தரைமட்ட தொட்டியில் மூடி இல்லாததால் கழிவுநீர் கலப்பு
ADDED : ஜூலை 10, 2025 03:23 AM

பெரியகுளம்: பெரியகுளம் தண்டுப்பாளையம் ரோட்டில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் கேட்வால்வு  தொட்டியில்  மூடி இல்லாததால், மீன்  கழிவு நீர் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் சில மாதங்களுக்கு முன்  ரோடு அமைக்கும் பணியின் போது, ரோடு அகலப்படுத்தப்பட்டது.
மண் அள்ளும் இயந்திரம் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் குடிநீர் கேட் வால்வு  மூடி சேதடைந்தது.  இதனால் திறந்த வெளி  தண்ணீர் தொட்டி உள்ளது.
இப்பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு மீன் கடைக்காரர்கள் இந்த தொட்டியில் தண்ணீர் எடுத்து மீனை சுத்தம் செய்கின்றனர்.
இதனால் பல கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் மாசுபடும் அவல நிலை தொடர்கிறது.   தரைமட்ட தொட்டி மூடி புதிதாக அமைக்க வேண்டும்.-

