UPDATED : அக் 24, 2026 11:16 PM
ADDED : அக் 24, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை- அழகர்சாமிபுரம் இணைப்பு ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை அலுவலக குடியிருப்பு பகுதி உள்ளது.
வடகரையிலிருந்து ஏராளமானவர்கள் இப்பகுதியை கடந்து தான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த ரோட்டில் சாக்கடை பாலம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில், முன்பிருந்த 4 மீட்டர் சாக்கடை பாலத்தை 7 மீட்டராக அகலப்படுத்தி, பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களில் சாக்கடை பாலம் பயன்பாட்டிற்கு வரும்.
