UPDATED : நவ 07, 2026 07:02 PM
ADDED : நவ 07, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே கே.
டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட், பழைய மூணாறு டிவிஷனை சேர்ந்தவர் ராஜ்குமார் 23. இவர், வீட்டின் அருகில் காரை நிறுத்தி சுத்தம் செய்தார். அந்த தண்ணீர் அருகில் வசிக்கும் பாலு 40, வீட்டின் வழியாக வழிந்து சென்றது. அது குறித்து பாலு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலு, ராஜ்குமாரை அரிவாளால் வெட்டினார். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமாரை மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
