ADDED : ஆக 15, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியில் இருந்து ஆடுபாலம் வழியாக தென்கரை வடகரை பகுதியை இணைக்கும் மில்லர் ரோடு முக்கிய பகுதியாகும். நகராட்சி 20 வது வார்டுக்கு உட்பட்டது.
இந்த ரோடு வழியாகத்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். இப் பகுதியில் சாக்கடை மண் மேவியுள்ளதால் மழை காலங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்லும்.
சாக்கடை கால்வாய் அமைக்க தொடர்ந்து கோரினர். இந்நிலையல் நகராட்சி சார்பில் ரூ.8.75 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அகலப்படுத்தும் பணி துவங்கியது.