ADDED : பிப் 19, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே சிலமலையில் பென்னி குவிக் அறக்கட்டளை, வ.உ.சிதம்பரனார் அரசு அலுவலர்கள் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான 2 மாத தையல் பயிற்சி முகாம் நடந்தது.
அரசு அலுவலர் அறக்கட்டளை தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். பென்னி குவிக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அர்ஜுன் பெருமாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரவி வரவேற்றார்.
பயிற்சியில் 36 பெண்கள் கலந்து கொண்டனர். கிராம கமிட்டி நிர்வாகி ஆறுமுகப்பெருமாள், பொருளாளர் சுப்பையன், சிலமலை வேளாள பெருமக்கள் சங்கத் தலைவர் பெருமாள், சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடமலை முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.