/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சண்முகாநதி அணை 50 அடியை தாண்டியது பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
/
சண்முகாநதி அணை 50 அடியை தாண்டியது பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
சண்முகாநதி அணை 50 அடியை தாண்டியது பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
சண்முகாநதி அணை 50 அடியை தாண்டியது பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
ADDED : ஆக 05, 2025 06:51 AM
கம்பம் : சண்முகா நதி அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 50 அடியை தாண்டியது.
ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையின் மொத்த கொள்ளளவு 52.5 அடியாகும். இதில் 26.5 அடி வரை உள்ள நீரை பாசனத்திற்கு பயன்படுத்தலாம். நீர்மட்டம் 26 அடியாக குறையும் போது நீர் திறப்பு நிறுத்தப்படும்.
இந்த அணையின் நீர் நேரடி பாசனத்திற்கு பயன்படாது. குளங்கள், கிணறுகள், கண்மாய்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர மட்டுமே பயன்படும். தென்மேற்கு பருவமழை காலத்தில் நீர்மட்டம் உயராது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் நீர்மட்டம் உயரும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை காலத்திலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த அணை ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஒவுலாபுரம், கன்னி - சேர்வை பட்டி, எரசை, வெள்ளையம்மாள் புரம், ஓடைப்பட்டி வரை உள்ள 1440 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியளிக்க பயன்படும்.
ஆண்டுதோறும் நவம்பரில் வினாடிக்கு 14.47 கன அடி வீதம் குறைந்தது 3 மாதங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது மேகமலையில் பெய்து வரும் கன மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 50.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 4 கன அடி நீர் வரத்து உள்ளது. ஒரு சில நாளில் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.
வடகிழக்கு பருவ மழை அக்டோபரில் முழு வீச்சில் இருக்கும். எனவே இந்தாண்டு அணை பல முறை நிரம்பி மறுகால் பாய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் , அணை நிரம்பியவுடன் பாசனத்திறகு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.