நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் சிவசேன கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் மனு
அளித்தனர்.
அதில், மாவட்டத்தில் 138 கோடி மதிப்பில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கல் குவாரிகளில் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்விற்கு செல்வதில்லை. துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.
மண்டல தலைவர் கருப்பையா, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.