/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த கோரி கடையடைப்பு, போராட்டம்
/
பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த கோரி கடையடைப்பு, போராட்டம்
பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த கோரி கடையடைப்பு, போராட்டம்
பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த கோரி கடையடைப்பு, போராட்டம்
ADDED : ஆக 12, 2025 05:56 AM

போடி : தேனி மாவட்டம், போடி அருகே உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் தனிநபர்களுக்கு தெரிவித்து விழா ஏற்பாடுகளை செய்து வரும் அறநிலையத்துறையை கண்டித்தும், பொதுமக்கள் கடையடைப்பு, வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உப்புக்கோட்டையில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழமையான இக்கோயில் கிராம தலைவர்கள், பொது மக்களால் விழாக்கள் நடத்தி வருகின்றனர்.
தற்போது கிராம கமிட்டியினர் வரி வசூல் செய்து செப். 4 ல் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் இதே ஊரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் ஆக. 28 ல் கும்பாபிஷேகம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராம மக்களுக்கு தெரிவிக்காமல், தனிநபர்களுக்கு மட்டும் தெரிவித்து கும்பாபிேஷக விழா ஏற்பாடு செய்து வரும் அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்தும், ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிேஷகம் நடத்த வலியுறுத்தி நேற்று தெருக்களில் கருப்பு கொடி கட்டி, கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைக்கும் வகையில் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தேனி டி.எஸ்.பி., தேவராஜ், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், ஆர்.ஐ., அன்புச்செல்வி, வி.ஏ.ஓ.கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இன்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வுக்கு நடடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.