/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற தேனி, போடியில் கடை அடைப்பு; இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

ADDED : நவ 30, 2024 06:16 AM

போடி; வணிக கட்டடங்களுக்கு வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறக் கோரி போடியில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடைகள் அடைப்பு நடந்தது. கடை அடைப்பில் தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் உட்பட அனைத்து வியாபாரிகள் சங்கங்களும் கடை அடைப்பில் ஈடுபட்டனர்.
இதனால் காமராஜ் பஜார், பி.ஹைச்.,ரோடு, தேவாரம் ரோடு, சத்திரம் ரோடு வெறிச்சோடி காணப்பட்டது.
தேனி: தேனியில் மாவட்ட மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம் மற்றும் அதன் கீழுள்ள 6 இணைப்புச் சங்கங்களை சேர்ந்த 180 கடைகள், அரிசி வியாபாரிகளின் சங்கத்தின் 30 கடைகள், கால்நடைத்தீவன விற்பனையாளர்கள் சங்கத்தின் கடைகள், பருத்தி, பஞ்சு மொத்த வியாபாரிகள் நடத்தும் கடைகள் என 270 கடைகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.
இதில் ஒரு நாள் வர்த்தகம் ரூ.5 கோடி பாதிக்கப்பட்டது என தேனி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் நடேசன் தெரிவித்தார். இதனால் தேனி நகரில் விருதுநகர் பேட்டை, எடமால் தெரு, பெரியகுளம் ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு
தேனி மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில், ஓட்டல்கள் முன் கருப்புக் கொடி கட்டிஎதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.
கம்பம், சின்னமனுார், பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதியில் கடையடைப்பு நடைபெறவில்லை. வழக்கம் போல் கடைகள் இயங்கின.