ADDED : ஜூலை 28, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :   அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரண்மனைப்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சீர் வாசகர் அமைப்பு சார்பில் இளையோர் நுாலகங்கள் உருவாக்க புத்தக துாதுவர் திட்டத்தில் 57 மாணவர்களுக்கு சிறுகதை புத்தங்கள் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஹேமலதா தலைமை வகித்தார். நிகழ்வில் ஆசிரியைகள் சுதா, நிர்மலா, தன்னார்வலர்கள் ராஜேஸ்கண்ணன், ராஜ்குமார், ராஜா, மகேந்திரன், பாலமுருகன், கண்ணதாசன் பங்கேற்றனர்.

