/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: வளர்ப்போர் விலைக்கு வாங்குவதால் சிரமம்
/
கால்நடை மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: வளர்ப்போர் விலைக்கு வாங்குவதால் சிரமம்
கால்நடை மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: வளர்ப்போர் விலைக்கு வாங்குவதால் சிரமம்
கால்நடை மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: வளர்ப்போர் விலைக்கு வாங்குவதால் சிரமம்
ADDED : அக் 29, 2024 05:41 AM
கம்பம்: கால்நடை மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட மருந்து பொருள்கள் தட்டுப்பாட்டால் கால்நடை வளர்ப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் 3 கால்நடை மருத்துவமனைகள், 52 மருந்தகங்கள், 48 கிளை நிலையங்கள் உள்ளன. இவற்றிற்கு அந்தந்த தரத்திற்கு ஏற்ப ஆண்டிற்கு 4 முறை மருந்துகள் சப்ளை செய்யப்படும். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மருந்துகள் சப்ளை செய்யவில்லை. இதனால் மருந்தகங்களில் மருந்துகள் , சிரப்புகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட கால்நடைகளின் நோய் தீர்க்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை.
இதனால் கிராமங்களில் வசிக்கும் விவசாய தொழிலாளர்கள் கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளை மருந்தங்கள், கிளை நிலையங்களுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றால் வெளியில் உள்ள கால்நடை மருந்து கடைகளில் சென்று வாங்கி வர கூறுகின்றனர். கால்நடைகளின் நோயின் தன்மைக்கு ஏற்ப குறைந்தது ரூ.300 முதல் ஆயிரம் வரை மருந்துக்கு ஒருநாளைக்கு செலவிட வேண்டியுள்ளது. திடீரென ஏற்படும் பணம் செலவு கால்நடை வளர்ப்போர் தயார் செய்ய முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
நோயை குணமாக்கும் வழி தெரியாமல் கால்நடை வளர்ப்போர் கடும் அவதியில் உள்ளனர்.
நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை ஆப்பரேஷன் செய்வதற்கு கூட கடையில் மருந்துகளை விலைக்கு வாங்கி வர வலியுறுத்துகின்றனர். இதனால் பல நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், இதுவரை இது போன்ற நிலை இருந்ததில்லை. கடந்த 6 மாதங்களுக்கு மேல் இந்த நிலை உள்ளது.10 நாட்களுக்கு முன் குறைவான அளவு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் மனிதர்களுக்கு கொடுக்கும் மருந்து வழங்கப்பட்டது.
அதுவும் பற்றாக்குறையாக உள்ளது என்கின்றனர். மனிதர்களுக்கு கொடுக்கும் மருந்து கால்நடைகளுக்கு தரலாமா என கால்நடை டாக்டரிடம் கேட்ட போது, ஒரு சில மருந்துகள் தரலாம். ஆனால் கால்நடைகளுக்கு கூடுதல் டோஸ் கொடுக்க வேண்டும் என்றார்.
இணை இயக்குநர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மருந்தகங்கள், கிளை நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.