/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் ... பற்றாக்குறை: வாகன நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
/
மாவட்டத்தில் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் ... பற்றாக்குறை: வாகன நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
மாவட்டத்தில் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் ... பற்றாக்குறை: வாகன நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
மாவட்டத்தில் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் ... பற்றாக்குறை: வாகன நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
ADDED : செப் 23, 2025 04:50 AM

தேனி: தேனி, கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய ஊர்களில் உள்ள டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்களில் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் உள்ளதால் நகரங்களில் நிலவும் வாகன நெருக்கடி, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு, கட்சியினர் பிரசார பகுதிகளில் போக்குவரத்து சீரமைப்பு கடும் சவாலாக மாறி போலீசார் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு நகரத்திற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் உருவாகும் போது அந்நகரின் மக்கள் தொகைக்கு ஏற்பவும், நகரின் பரப்பளவு, இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை, முக்கிய வழித்தடங்கள், முக்கிய சந்திப்பு பகுதிகள்,சிக்னல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் போலீசார் நியமிக்க வேண்டும் என்பது போக்குவரத்து ஆணையத்தின்விதிமுறை. ஒரு போக்குவரத்து ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள், 3 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 15 போலீஸ்கார்கள் இந்த எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை போக்குவரத்து வாகனங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நகருக்கு நகர் மாறுபடும்.
ஆனால் தற்போதுள்ள டிராபிக் ஸ்டேஷன்களில் இந்த எண்ணிக்கையில் போலீசார்கள் இல்லை. தேனியில் போக்குவரத்தை முறைப்படுத்த கூடுதல் போலீசார் தேவை உள்ளது.
கம்பத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடம் 15. ஆனால் 24 பேர் தேவை உள்ளது. பெரியகுளத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடம் 11 பேர். ஆனால் 21 பேர் தேவை உள்ளது. போடியில் அனுமதிக்கப்பட்ட 14 பணியிடங்கள் போலீசார் உள்ளனர். கூடுதலாக 10 போலீசார் தேவை உள்ளது.
இடநெருக்கடியில் தவிப்பு தேனி டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் இடநெருக்கடியால் உடை மாற்றக்கூட இடம் இன்றி போலீசார் தவிக்கின்றனர். கம்பத்தில் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மாடியில் போதிய வசதியின்றி டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் இயங்குகிறது. போடியில் மிக குறுகிய இடத்திலும், பெரியகுளத்தில் பழைய தென்கரை போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் இயங்குகிறது. ஸ்டஷன்களில் நிலவும் இடநெருக்கடியில் விதிமீறி பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்த கூட வசதி இல்லை.
ஆண்டிபட்டி டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிப்பு வெளியிட்டு, இதுவரை அமைக்கவில்லை. சின்னமனுாரிலும் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் இல்லை. டிராபிக் ஸ்டேஷன் இல்லாத ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் தேர்தல் காலங்களில் வாகன நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலை தொடர்கிறது. எனவே, மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு
கூடுதல் போலீசார் நியமிக்கவும், இட நெருக்கடியில் செயல்படும் ஸ்டேஷன்களை புதிய இடத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.