/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்புகளால் முல்லைப்பெரியாறு கால்வாயாக - சுருங்கியது; நீர்வரத்து குறையும் நாட்களில் அகற்ற வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்புகளால் முல்லைப்பெரியாறு கால்வாயாக - சுருங்கியது; நீர்வரத்து குறையும் நாட்களில் அகற்ற வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளால் முல்லைப்பெரியாறு கால்வாயாக - சுருங்கியது; நீர்வரத்து குறையும் நாட்களில் அகற்ற வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளால் முல்லைப்பெரியாறு கால்வாயாக - சுருங்கியது; நீர்வரத்து குறையும் நாட்களில் அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 05:58 AM

கூடலுார்: கூடலுார் அருகே லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரை செல்லும் முல்லைப் பெரியாற்றின் கரையின் இரு பகுதிகளிலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் ஆறு கால்வாய் போல் சுருங்கியுள்ளது. தற்போது நீர்வரத்து குறைவாக இருக்கும் நிலையில் ஆக்கிரப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் துவங்கி கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனுார், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக 47 கி.மீ., தூரம் கொண்ட முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையை அடைகிறது. ஆற்றின் இரு பகுதியில் உள்ள கரையில் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு விளை நிலங்களாகவும், தென்னந்தோப்புகளாகவும் மாறியுள்ளது.
லோயர்கேம்ப், கூடலுார், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆறு சுருங்கி கால்வாயாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் கரைகள் உடைந்து நிலங்களில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இதில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும், மதுரை குடிநீருக்கும், கிராமங்களில் குடிநீருக்காக பம்பிங் செய்வதற்கும் போக 50 கன அடி நீர் கூட ஆற்றில் செல்லவில்லை.
நீர்வரத்து குறைவாக உள்ள இந்த நேரத்தில் ஆற்றின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்றி ஆற்றை அகலப்படுத்த நில அளவைத் துறை, வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் நீர்வளத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விவசாயிகள் கூறும்போது, 'முல்லைப் பெரியாற்றின் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் ஆற்றில் நீர்வரத்து குறைவாக வரும்போது தண்ணீரை விவசாயத்திற்காக திருடுகின்றனர். ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றினால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், ' என்றனர்.