/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குட்கா வழக்கை சரியாக விசாரிக்காத எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
குட்கா வழக்கை சரியாக விசாரிக்காத எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
குட்கா வழக்கை சரியாக விசாரிக்காத எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
குட்கா வழக்கை சரியாக விசாரிக்காத எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 18, 2024 04:21 AM
தேனி: தேனியில் குட்கா வழக்கை சரியாக விசாரிக்காத பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., இதிரிஸ்கானை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
தேனி சுப்பன் செட்டி தெருவில் உள்ள கோடவுனில் ரூ.1.67 லட்சம் மதிப்பிலான 23 தடை செய்யப்பட்ட புகையிலை மூடைகளை தேனி டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணை அதிகாரியாக எஸ்.ஐ., இதிரிஸ்கான் இருந்தார். வாழையாத்துப்பட்டி நாகராஜ் 55, அரண்மனைப்புதுார் பாண்டி 65, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அமர்சிங் 33, ஆகிய மூவரை கைது செய்தனர். கோடவுனில் இருந்து மற்றொரு வாலிபரை பழனிசெட்டிபட்டி சிறப்பு எஸ்.ஐ., ஜெகன் விடுவித்தார். இச்சம்பவம் எஸ்.பி., சிவபிரசாத் கவனத்திற்கு சென்றது. சிறப்பு எஸ்.ஐ., ஜெகனை ஆயுதபடைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட வாலிபர், அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கினை சரியாக விசாரிக்காத காரணத்தால், விசாரணை அதிகாரி எஸ்.ஐ., இதிரிஸ்கானை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.