/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நலவாழ்வு உரிமை சட்டம் நிறைவேற்ற கையெழுத்து இயக்கம்
/
நலவாழ்வு உரிமை சட்டம் நிறைவேற்ற கையெழுத்து இயக்கம்
நலவாழ்வு உரிமை சட்டம் நிறைவேற்ற கையெழுத்து இயக்கம்
நலவாழ்வு உரிமை சட்டம் நிறைவேற்ற கையெழுத்து இயக்கம்
ADDED : ஏப் 17, 2025 06:00 AM
கம்பம்: கம்பத்தில் நலவாழ்வு உரிமை சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் வண்ணம் அரசியல் அமைப்பு திட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஏப்ரல் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆரோக்கிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நித்தியானந்தம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர், ஸ்ரீ ராமன், ரவீந்திரன், முரளி ,மணியரசன், சிவசாமி, டாக்டர் பூர்ணிமா உள்ளிட்டோர் பங்கேற்பினர். நகரின் பல பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.