/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளிநாட்டு வேலை என ரூ.4.7 லட்சம் மோசடி: சிவகங்கை நபர் மீது வழக்கு
/
வெளிநாட்டு வேலை என ரூ.4.7 லட்சம் மோசடி: சிவகங்கை நபர் மீது வழக்கு
வெளிநாட்டு வேலை என ரூ.4.7 லட்சம் மோசடி: சிவகங்கை நபர் மீது வழக்கு
வெளிநாட்டு வேலை என ரூ.4.7 லட்சம் மோசடி: சிவகங்கை நபர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2025 03:02 AM
தேனி: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி தேனியை சேர்ந்த அமுதா 42, என்பவரிடம் ரூ. 4.72 லட்சம் மோசடி செய்த சிவகங்கைமாவட்டம் நாட்டரசன்கோட்டை சித்தார்த் கவுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் வெங்கடாசலபுரம் கனகராஜ். சில ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்தார். இவரது மனைவி அமுதா. கனகராஜ் மூலம் சிவகங்கை நாட்டரசன் கோட்டையைச்சேர்ந்த சித்தார்த் கவுதம் குடும்பத்தினரிடம் அறிமுகமானர். இதன் மூலம் கனகராஜ் மகளுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அமுதாவிடம் கூறினார்.
மேலும் தனக்கு தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் இருப்பதால் எளிதில் வெளிநாட்டில் வேலைவாங்கி தரமுடியும் என்றார். இதனை நம்பி பல தவணைகளாக ரூ.4.72 லட்சத்தை சித்தார்த் கவுதமிடம் அமுதா வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் அவர் ஏமாற்றினார்.
அமுதா தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சித்தார்த் கவுதம் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் மீது சிவகங்கை தாலுகா போலீசில்மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.