/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிவகாமியம்மன் கோயில் மண்டல பூஜை: விரிவாக நடத்த கோரிக்கை
/
சிவகாமியம்மன் கோயில் மண்டல பூஜை: விரிவாக நடத்த கோரிக்கை
சிவகாமியம்மன் கோயில் மண்டல பூஜை: விரிவாக நடத்த கோரிக்கை
சிவகாமியம்மன் கோயில் மண்டல பூஜை: விரிவாக நடத்த கோரிக்கை
ADDED : மார் 18, 2025 05:39 AM
சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் மண்டல பூஜைகளை விரிவாக நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலின் திருப்பணி உபயதாரர்களால் செய்யப்பட்டு,
கடந்த பிப். 10ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 45 வது நாள் மண்டல பூஜைகள் செய்த பின் தான், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நிறைவிற்கு வரும்.
அதன்படி மார்ச் 25ல் மண்டல பூஜைகள் நடத்த வேண்டும்.
திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்தது போல் மண்டல பூஜையை விரிவாக செய்ய பக்தர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதை ஏற்று உபயதாரர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி கொடுத்த திருப்பரங்குன்றம் ராஜா பட்டரை மூலம் மண்டல பூஜையை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக செயல் அலுவலரிடம் கும்பாபிேஷக விழாக்குழுவினர் அனுமதி கோரியுள்ளனர்.