/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோக்களை திருடி விற்ற ஆறு பேர் கைது
/
ஆட்டோக்களை திருடி விற்ற ஆறு பேர் கைது
ADDED : மார் 14, 2024 04:46 AM

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் பார்த்தசாரதி 32. இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் 3 மாதங்களுக்கு முன்பு கேரளா சூரியநெல்லி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் ஆட்டோ விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.
2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன் உள்ள காலி இடத்தில் நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் ஆட்டோவை காணவில்லை.
இதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் 36, தோட்ட வேலைக்காக கேரளா கட்டப்பனையில் உள்ள் விக்கி என்பவரிடம் ஆட்டோ விலைக்கு வாங்கி பயன்படுத்தினார். 2 நாட்களுக்கு முன் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஆட்டோவும் காணவில்லை. இருவரும் போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் ஆட்டோக்களை திருடியதாக போடி மீனாட்சிபுரம் வசந்தகுமார் 34. தேனி சமதர்மபுரம் மாரிச்சாமி 29. ஆண்டிபட்டி முத்தனம்பட்டி சண்முகராஜா 35. அல்லிநகரம் சவுகத் அலி 38, மணிகண்டன் 45. ஆகியோர் ஆட்டோக்களை திருடி கலர் பெயிண்ட் அடித்து, நம்பரையும் மாற்றி தஞ்சாவூர் சதீஷ்குமாரிடம் விற்பனை செய்துள்ளனர். போடி டி.எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் வசந்தகுமார், மாரிச்சாமி உட்பட ஆறு பேரையும் கைது செய்து ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து தாலுாகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

