ADDED : ஜன 18, 2025 12:26 AM
உத்தமபாளையம்:தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் மோகன்பாபு 21, என்பவர் குத்தி கொலை செய்த வழக்கில் இதே கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோகிலாபுரத்தில் பூக்குழி தெருவில் வசிப்பவர் முருகன் மகன் மோகன்பாபு. இவருக்கும் இதே ஊரை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் முன்விரோதம் இருந்தது. ஜன 13ல் இரவு 11 மணிக்கு மோகன்பாபு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் குத்தினர்.
பலத்த காயங்களுடன் தெருவில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மோகன் பாபு சிகிச்சை பலன் இன்றி ஜன. 15ல் இறந்தார். உத்தமபாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் 31, அஜித் குமார் 26, கவுதம் 19, பிரவின்குமார் 36, ரஞ்சித் 36, லட்சுமணன் 25 ஆகிய ஆறு - பேரை கைது செய்தனர்.