/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுவாமி சிலை பேசும் எனக் கூறி மோசடி செய்த 6 பேர் கைது ரூ.ஒரு கோடி விலை பேசி முன்பணம் பெற்றனர்
/
சுவாமி சிலை பேசும் எனக் கூறி மோசடி செய்த 6 பேர் கைது ரூ.ஒரு கோடி விலை பேசி முன்பணம் பெற்றனர்
சுவாமி சிலை பேசும் எனக் கூறி மோசடி செய்த 6 பேர் கைது ரூ.ஒரு கோடி விலை பேசி முன்பணம் பெற்றனர்
சுவாமி சிலை பேசும் எனக் கூறி மோசடி செய்த 6 பேர் கைது ரூ.ஒரு கோடி விலை பேசி முன்பணம் பெற்றனர்
ADDED : ஜன 25, 2025 01:51 AM

தேனி:தேனி அருகே சுவாமி சிலைக்கு பூஜை செய்தால், அச்சிலை பேசும், செல்வம் பெருகும் எனக்கூறி உலோக சிலையை ரூ.1 கோடிக்கு விலை பேசி ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்று மோசடி செய்த 6 பேரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
தேனி சுக்குவாடன்பட்டி ஆண்டவர் 47, தனது காரை பழனிசெட்டிபட்டி ஒர்க் ஷாப்பில் பழுது பார்க்க ஒப்படைத்தார். அங்கு மெக்கானிக்காக பணியாற்றிய மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி சிவா பழக்கமானார். அவர் ஆண்டவரிடம், 'எனக்கு தெரிந்தவரிடம் சுவாமி சிலை உள்ளது. அந்த சிலைக்கு யார் பூஜை செய்கிறார்களோ, அவர்களிடம் சிலை பேசும், வீட்டில் செல்வம் பெருகும்,' என்றார்.
சிலையை 'வாங்கிக் கொள்வதாக ஆண்டவர் உறுதியளித்தார். ஜன.,23ல் ஓர்க் ஷாப்பிற்கு ஆண்டவர், அவரது நண்பர் நாகராஜூடன் சென்றார். அங்கு மதுரை மாவட்டம், பேரையூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி தங்கமணி, விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி பாலமுருகன், மதுரை டி.கிருஷ்ணாபுரம் சம்பழகு, அறந்தாங்கி மீமிசல் ரவிச்சந்திரன் 52, மதுரை டி.கல்லுப்பட்டி சூர்யபிரகாஷ் 21, ஆகிய ஐந்து பேரையும், மெக்கானிக் சிவா, ஆண்டவரிடம் அறிமுகம் செய்தார்.
பின்பு ஆறு பேறும், 'தங்களிடமுள்ள ரூ.1 கோடி மதிப்பு சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்றனர். இதனை நம்பிய ஆண்டவர், 'மெக்கானிக் சிவாவிடம் ரூ.5 ஆயிரம் முன்பணமாக வழங்கினார். காரில் இருந்த உலோக சுவாமி சிலையை எடுத்து ஆண்டவரிடம் கொடுத்தனர்.
ஆண்டவர் வீட்டில் பூஜைசெய்தபோது, சிலை பேசாமல் இருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆண்டவர், ஒர்க் ஷாப்பிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டார். பணம் தராமல் ஆறு பேறும் கொலை மிரட்டல் விடுத்தனர். ஆண்டவர்பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் அளித்தார். எஸ்.ஐ., மணிமாறன் தலைமையிலான போலீசார், சிவா, தங்கமணி, சம்பழகு, சூர்யபிரகாஷ், பாலமுருகன், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கார், சிலையை கைப்பற்றினர்.