/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைக்கும் பணியில் மெத்தனம்
/
முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைக்கும் பணியில் மெத்தனம்
முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைக்கும் பணியில் மெத்தனம்
முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைக்கும் பணியில் மெத்தனம்
ADDED : அக் 27, 2024 04:21 AM
கம்பம், : காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய பேரூராட்சிகளில் அம்ரூத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் குடிநீர் உள்கட்டமைப்பை வலுப்படுத்த மக்கள் தொகை, பரப்பு அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி உள்ளது.
காமயகவுண்டன் பேரூராட்சிக்கு ரூ.19 கோடி அனுமதிக்கப்பட்டது. அந்த பணிகளில் குறிப்பாக முல்லைப் பெரியாற்றில் அமைக்கப்படும் உறை கிணறு பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பைப் லைன் பதிக்கும் பணிகள் மற்றும் தொட்டிகள் கட்டும் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் கூறுகையில், அம்ரூத் திட்டப் பணிகள் 75 சதவீதம் முடிந்துள்ளது. மற்ற ஊர்களை காட்டிலும் இங்கு துரிதமாக பணிகள் நடைபெறுகிறது . நிறுத்தி வைத்திருந்த உறை கிணறு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.