/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாப்பம்மாள்புரத்தில் சிறு பாலம் உடைந்ததால் விபத்து அபாயம்
/
பாப்பம்மாள்புரத்தில் சிறு பாலம் உடைந்ததால் விபத்து அபாயம்
பாப்பம்மாள்புரத்தில் சிறு பாலம் உடைந்ததால் விபத்து அபாயம்
பாப்பம்மாள்புரத்தில் சிறு பாலம் உடைந்ததால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 16, 2025 07:05 AM

ஆண்டிபட்டி; பாப்பம்மாள்புரம் ஊரு காத்த மாரியம்மன் கோயில் அருகே உடைந்த சிறு பாலம் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரத்தில் 3, 5 வது வார்டுகளை இணைக்க இப்பகுதி ஓடையின் குறுக்கே சிறு பாலம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பாலத்தில் இருந்து ஆண்டிபட்டி சுடுகாடு பகுதி வரை சமீபத்தில் இணைப்பு ரோடு அமைக்கப்பட்டது. இணைப்பு ரோடு அமைக்கப்பட்ட பின் பாலம் வழியாக கனக வாகனங்களும் சென்று திரும்பியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பாலத்தின் கான்கிரீட் உடைந்து சரிந்து விட்டது.
தற்போது உடைந்த பாலத்தின் வழியாக ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நடந்து செல்வதுடன் ஆட்டோ இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று திரும்புகிறது. இரவில் கவனக்குறைவாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பாலமுருகன் கூறியதாவது: பாலத்தின் இருபுறமும் ஏற்கனவே தடுப்புச் சுவர் இன்றி ஆபத்தான நிலையில் இருந்தது. பலம் இல்லாத பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்ட பல மாதங்களாக வலியுத்தியும் பேரூராட்சி நடவடிக்கை இல்லை. சமீபத்தில் கனரக வாகனம் சென்ற போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக வாகனம் விபத்திலிருந்து தப்பியது. இடிந்து சேதமான பாலத்தை அகற்றி இப்பகுதியில் புதிய பாலம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.