/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்; கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல்

ADDED : செப் 03, 2025 09:19 AM
தேனி; மாவட்டத்தில் இன்று (செப்., 3) முதல் செப்.30 வரை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் இலம்பி தோல் நோய் தடுப்பூசி வழங்கும் முகாம் நடக்க உள்ளது.'' என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: கொசு, ஈ, உண்ணி கடி மூலமாகவும், பாதிக்கப்பட்ட மாடுகள் மூலம் கன்றுக்குட்டிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க மாவட்டத்தில் 60 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளில் ஈடுபட 53 கால்நடை மருந்தகஙகள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 47 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மேற்குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இலவசமாக வழங்க உள்ளனர்.
நான்கு வயதிற்கு மேல் உள்ள கன்றுகள், சினை இல்லாத மாடுகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை இந்த தடுப்பூசி செலுத்த வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.