/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி
ADDED : செப் 20, 2025 11:57 PM
தேனி: மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணி ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணி, ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஸ்மாஷர்ஸ் அணி 42.2 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் எடுத்தது. தேவகுமார் 50 ரன்கள் எடுத்தார். பாப்ஆனந்தராஜா, செல்வம் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
சேசிங் செய்த ஜாக்கிஸ்போர்ட்ஸ் அணி 29 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. டொனால்ட் 35 ரன்கள் எடுத்தார். தீபன்ராஜா, மெளலி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.